அதிபர் உயிரிழந்த சம்பவத்தில் தவறு நிகழ்ந்திருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை  — கல்வி அமைச்சர் !

Sunday, February 25th, 2018

தலைமைத்துவப் பயிற்சியின் போது பாடசாலை அதிபர் உயிரிழந்த சம்பவத்தில் தவறு நிகழ்ந்திருந்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டையைச் சேர்ந்த பாடசாலை பெண் அதிபர் உயிரிழந்த சம்பவம், தனியார் பயிற்சி நிலையமொன்றில் இடம்பெற்றுள்ளது.

இங்கு பெற்றுக் கொடுக்கப்படும் பயிற்சியின் தரம் தொடர்பில் கேள்வி உள்ளது.

குறித்த அதிபர் உயிரிழந்தமை தொடர்பில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இதன் உண்மைத் தன்மை என்ன என எம்.பி டலஸ் அழகப்பெரும, கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும்,

எதிர்காலத்தில் அதிபர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னர் அவர்களின் உடல் தகுதியை பரிசீலிப்பதற்கும், கடுமையான பயிற்சிகளை நிறுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ளேன்

இந்தச் சம்பவம் தொடர்பில் உடனடியான விசாரணையை நடத்துமாறு பணித்திருப்பதுடன், விசாரணை அறிக்கை கிடைத்த பின்னரே உண்மையான காரணத்தைக் கூற முடியும்.

குறித்த அதிபர் ஏற்கனவே கடேட் பயிற்சி பெற்றவர் என்பதுடன், குறிப்பிட்ட பயிற்சி கட்டாயமானது இல்லையென்றபோதும் அவர் தானாக முன்சென்றுள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

அதேநேரம், 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் பாடசாலை அதிபர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகள் இராணுவத்தினரின் பங்களிப்புடன் வழங்கப்பட்டிருந்தன.

எனினும் 2015ஆம் ஆண்டின் பின்னர் மோசமான நிலைமைய குறைத்து தலைமைத்துவப் பயிற்சிக்கான பாடநெறியை நாம் தயாரித்திருந்தோம்.

இதுபோன்று அதிபர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிகளுக்கு முன்னர் அவர்களின் உடல் தகுதி மற்றும் உடலில் உள்ள சக்தியை பரிசீலிப்பதற்கான திட்டமொன்று அவசிமாகியுள்ளது எனவும்அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: