தனியார் சாரதிகளுக்கு புதிய வீதி அடையாளம்!

Thursday, March 9th, 2017

கொழும்பு நகரத்தில் அதிக போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் நோக்கில் பேருந்து போக்குவரத்திற்காக தனியாக வழிப்பாதை (லேன்) ஒன்றை அடையாளப்படுத்தி கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதற்கான திட்டம் மார்ச் மாதம் 12ஆம் திகதியில் இருந்து ராஜகிரிய சந்தியில் இருந்து ஆயுர்வேத சந்தி வரை வீதி ஒன்றை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர், கொரியா போன்ற நாடுகளில் தற்போது செயற்படுத்தப்படுகின்ற இந்த முறை, பயணிகளின் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வழங்குவதே இதன் நோக்கமாகும்.வீதியில் இடவசதிகளை ஒதுக்கிக் கொண்டு நபர்களின் நேரங்களை மீதப்படுத்துவது இதன் மற்றுமொரு நோக்கமாகும். தற்போது ராஜகிரியவில் இருந்து ஆயுர்வேத சந்தி வரை மாத்திரம் இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

இதன் முன்னேற்றத்தை அவதானித்து, கொழும்பிலுள்ள ஏனைய வீதிகளுக்கும் புதிய வழிப்பாதை நடைமுறை அமுல்படுத்தப்படும்.

இதேவேளை, தனிப்பட்ட வாகனங்களை திரும்புவதற்காக ஒதுக்கப்பட்ட வழிப்பாதை ஒன்றை உரிய முறைக்கமையவே பயன்படுத்த முடியும். அதற்கமைய வரைபடம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பச்சை நிறத்தில் உள்ள குறியீட்டில் மாத்திரமே பஸ் பயணிக்க முடியும். ஏனைய நிறங்களில் உள்ள குறியீட்டில் தனிப்பட்ட வாகனங்கள் பயணிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 625.0.560.320.160.600.053.800.668.160.90 (1)

Related posts: