ஜுன் 20 பொதுத் தேர்தல் தொடர்பில் மே மாதம் 2 ஆம் திகதி அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும் அழைத்து விஷேட ஆலோசனை : மே 4 இல் வேட்பாபளர் விருப்பு இலக்கங்கள் அறிவிப்பு !

Tuesday, April 21st, 2020

பல தரப்புக்களதும் எதிர்ப்பிற்கும் மத்தியில் ஜுன் 20ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது என வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்தல் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் முரண்பட்டிருந்த நிலையில் அவர்கள் ஒன்று கூடி புதிய திகதி தொடர்பில் ஆராய்ந்து ஜீன் 20 ஆம் திகதியை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்றையதினம் கட்சியின் தலைவர்கள் பிரதிநிதிகள் மற்றும் சுகாதார தரப்பினர் மற்றும் பாதுகாப்பு தரப்பினரை அழைத்து தேர்தல் ஆணையகம் சந்திப்பொன்றை மேற்கொண்டது.

இதன்போது எதிர்கட்சிகள் தரப்பில் தேர்தலை எதிர்கொள்வதற்கான போதியளவான கால அவகாசம் இல்லை உள்ளிட்ட பல பிரச்சினைகள் முன்னிறுத்தி ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த சந்திப்பில் பொதுவான தீர்வுகள் ஏதும் எட்டப்படாத நிலையில்  எதிர்வரும் 4 ஆம் திகதி பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் வேட்பாளர்களது விருப்பு இலக்கங்களை வெளியிட முடியும் என தேர்தல் ஆணைக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது நாட்டிலேற்பட்டுள்ள கொரேனா தாக்கத்தின் விளைவுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட வேண்டும் என்று ஒரு சாரார் வலியுறுத்தியதற்கமைய எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதி அனைத்தக் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினர், சுகாதார தரப்பினர் உள்ளிட்ட பொறுப்பு மிக்க தரப்பினர்கள் அனைவரையும் அழைத்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

அத்துடன் மே மாதம் 2 ஆம் திகதி நடைபெறும் குறித்த கூட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமையவே மே மாதம் 4 ஆம் திகதி வேட்பாளர்களது விருப்பு இலக்கங்கள் அறிவிக்கப்படும் எள்றும் தேர்தல் ஆணையக தரப்புக்களிலிருந்து செய்திகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts:

நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கும் செயல்முறையே இன்று தாய்நாட்டிற்கு தேவையாக உள்ளது - சுதந்த...
இலங்கை தொடர்பான வெளிப்புற தலையீடுகளுக்கு எதிர்ப்பு வெளியிட்டது சீனா - சீன பிரதிநிதி ஜெனீவாவில் தெரிவ...
இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் கச்சதீவு அந்தோனியார் உற்சவத்தை நடத்த ஏற்பாடு – தலா 50 இலங்கை இந்திய ...