இலங்கை மின்சார மனிதவள ஊழியர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன!
Tuesday, October 18th, 2016
இலங்கை மின்சார சபைக்காக சேவையாற்றிய மனிதவள ஊழியர்கள் 3828 பேருக்கு இன்று நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் இதன்மூலம் மனிதவள ஊழியர்களின் தொழிலுக்கு உத்தரவாதம் கிடைத்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக் ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மனிதவள சேவை வழங்கும் நிறுவனங்கள் ஊடாக சேவைக்கு அமர்த்தப்பட்ட மற்றும் மானி வாசிப்பாளர்கள் ஆகியோருக்கு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார் இலங்கை மின்சார சபைக்கு, மனிதவள நிறுவனங்கள் ஊடாக இதுவரை சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த மற்றும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 6 196 ஊழியர்களின் குடும்பங்கள் நன்மையடைவதாகவும் அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:
கிளிநொச்சி - இரணைதீவு பகுதி காணிகளை விடுவிப்பதற்கான கடிதம் கிடைத்துள்ளது -கிளி. மாவட்ட அரச அதிபர் ச...
ஊரடங்குச் சட்டம் தளர்வை அடுத்து நாடுமுழுவதும் 4700 பஸ்கள் போக்குவரத்து சேவையில் - பொது போக்குவரத்து ...
ரஷ்ய விமானம் தொடர்பான பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் – அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத...
|
|
|


