துறைமுகநகர சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை சபையில் சபாநாயகர் அறிவித்தார்!

துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளது.
இந்த சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை சபாநாயகர் இன்று சபையின் ஆரம்பத்தில் அறிவித்துள்ளார்.
இதன்படி, குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வசன வாக்கெடுப்பும், விசேட பெரும்பான்மையும் அவசியம் என்றும் உயர்நீதிமன்றம் தமது வியாக்கியானத்தில் குறிப்பிட்டிருப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் குறிப்பிட்ட சரத்துக்கள் திருத்தப்படுமாக இருந்தால், சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர்நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
போக்குவரத்துச் சட்டங்கள் வடமராட்சியில் இறுக்கம் - பொலிஸார் அறிவிப்பு!
ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய எவருக்கும் ஜனாதிபதி மன்னிப்பு அளிக்கப் போவதில்லை - நீதி அமைச்சர் அ...
நாளைமுதல் வடக்கு, உள்ளிட்ட 4 மாகாணங்களின் பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சின் செயலாளர் அறிவிப்...
|
|