நிதி மாநாட்டுக்குஅமைச்சர் ரவி ஆளுனர் இந்திரஜித் வோஷிங்டன் பயணம்!
Monday, October 3rd, 2016
பொதுநலவாய அமைப்பு, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியன இணைந்து நடத்தும்மாநாட்டில் கலந்துகொள்வதற்கு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இந்தவாரம் வாஷிங்டன் செல்லவுள்ளார்.
அவருடன், நிதியமைச்சின் செயலாளர்; ஆர் எச் எஸ் சமரதுங்க மற்றும் மத்திய வங்கியின்ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி ஆகியோரும் அமெரிக்கா செல்கின்றனர்.
எதிர்வரும் புதன்கிழமையன்று பொதுநலவாய நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்களி;ன் மாநாடுநடைபெறவுள்ளது. இதனையடுத்து 7 முதல் 9ம் திகதிவரை, சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபைஅமர்வு இடம்பெறவுள்ளது. இதில், அமைச்சர் ரவி கருணாநாயக்க பங்கேற்கவுள்ளார்.

Related posts:
பொது மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த யாழ்ப்பாணத்தில் பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி!
2022 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர் - ஒதுக்கீடுச் சட்...
வழக்கு விசாரணைகளை விரைவில் நிறைவு செய்வதற்காக புதிய வேலைத்திட்டம் - நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார!
|
|
|


