தொடரும் சீரற்ற காலநிலை – டெங்கு, வயிற்றுப்போக்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு என பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரிக்கை!

Friday, November 12th, 2021

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் டெங்கு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.

வெள்ள நீர் வடிந்த பின்னர் நுளம்புகள் மற்றும் ஈக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக அச்சங்கத்தின் தலைவரான உபுல் ரோகண தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கனமழையால் குடிநீர் ஆதாரங்களும் மாசடைந்துள்ளன. தற்காலிக தங்குமிடங்களில் உள்ளவர்களின் உடல்நிலைகளை பொது சுகாதார பரிசோதகர் சங்கங்கள் கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்ட நபர்களின் வீட்டிலுள்ள நீர் ஆதாரங்களை சுத்திகரிப்பு செய்வதற்கும், அவர்களின் வீடுகளை எவ்வாறு சுத்தம் செய்வது என்பது தொடர்பில் விழிப்புணர்வு மற்றும் வசதிகளை வழங்குவதற்கு அவர்கள் தயாராகி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: