அஞ்சல் மா அதிபரின் முக்கிய வேண்டுகோள்!
Monday, June 18th, 2018
அஞ்சல் பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பை நிறைவு செய்து விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும் என அஞ்சல் மா அதிபர் ரோஹண அபேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
குறித்த போராட்டம் காரணமாக தபால் சேவை பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. எனவே கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே பல கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணி கடந்த 11ஆம் திகதி முதல் 7 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் 200 வீதத்தினால் மருந்துப் பொருட்களின் விலைகள் உயர்வு!
புதிய பாடசாலைக் கல்வியாண்டின் பாடப்புத்தகம் வழங்கும் தேசிய வைபவம்!
அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸ் கொரோனாவிலிருந்து 76 சதவீத பாதுகாப்பளிக்கிறது - மருத்துவ ஆராய்...
|
|
|


