துறைசார் அலுவல்களுக்கான 164 வாகனங்கள் ஜனாதிபதியால் வழங்கிவைப்பு!

துறைசார் அலுவல்களுக்கு அவசியமான 164 வாகனங்களை, உரிய அமைச்சுகள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சு மற்றும் நோயாளர் காவுவண்டி சேவைகளுக்கு, 50 நோயாளர் காவுவண்டிகள் இதன்போது வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், வன ஜீவராசிகள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களுக்கு, 52 தண்ணீர் தாங்கி வாகனங்களும், 62 கெப் ரக வாகனங்கள் கையளிக்கப்பட்டன.
இதேவேளை, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் அன்பளிப்பு செய்யப்பட்ட 150 உந்துருளிகளை, காவல்துறை திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வும், ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது. குறித்த உந்துருளிகள், காவல்துறை திணைக்களத்தின் போக்குவரத்து சேவைக்குப் பயன்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|