நாட்டில் கொரோனா அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் – இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவிப்பு!

Tuesday, June 8th, 2021

நாட்டின் கொரோனா பரவல் நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னர் நிபுணர்கள் குழுவுடன் பேச்சுக்களை நடத்தி, கொரோனா அபாயம் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னரே நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் என கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தற்போது காணப்படும் பரிந்துரைகளின்படி, அமுல்படுத்தப்பட்டுள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14 ஆம் திகதிவரை அமுலாக்கப்பட்டிருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ள இராணுவத் தளபதி தனிமைப்படுத்தப்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் 77 கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டிருந்தாலும், அந்த பகுதிகளில் கொவிட் பரவும் அபாயம் காணப்படுவதால் மக்களுக்கு நடமாட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

போக்குவரத்து கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ள போதிலும் கொரோனா வைரசின் தீவிரதன்மை குறையைவில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கின்றது எனவும் குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதுநேரம் நாளாந்தம் சராசரியாக 40 பேர் உயிரிழக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ள   குறித்த சங்கம் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது, மோசமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஏப்பிரல் மேமாதத்தில் ஒக்சிசனில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையும் 441 வீதமாக அதிகரித்துள்ளது எனவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

இலங்கையில் புத்தாண்டு கொவிட் கொத்தணி உருவாகி ஒன்றரை மாதங்களான நிலையில் வீடுகளில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதனடிப்படையில் கடந்த 4 நாட்களில் 48 பேர் வீடுகளில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுகாதார பணிப்பாளரினால் உறுதி செய்யப்பட்டு அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் கொவிட் அறிக்கையில் இந்த விடயம் வெளியாகியுள்ளது.

இந்த மரணங்கள் இடம்பெற்ற 4 நாள்களும் இலங்கையில் தினசரி பதிவாகிய மரணங்களின் எண்ணிக்கை 40 வரை அதிகரித்துள்ளது. குறித்த 4 நாட்களில் மொத்தமான 176 மரணங்கள் பதிவாகிய நிலையில் அதில் 48 பேர் வீடுகளில் உயிரிழந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

000

Related posts: