துருக்கி – சிரியாவில் பெருந்துயர் – பலி எண்ணிக்கை 5000 ஐ கடந்தது – உலக நாடுகள் உதவிக்கரம்!

Wednesday, February 8th, 2023

நில அதிர்வுகளால் துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரு நாடுகளிலும் 5,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, துருக்கியின் உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தது 3,419 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த நாட்டின் துணை ஜனாதிபதி ஃபுவாட் ஒக்டே கூறினார்.

மேலும் 20,534 பேர் காயமடைந்துள்ளதுடன், சுமார் 6,000 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, சிரியாவில் பலி எண்ணிக்கை 1,602 ஆக உயர்ந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

துருக்கியின் அனர்த்த மற்றும் அவசரகால முகாமைத்து ஆணைக்குழுவின் சமீபத்திய புதுப்பிக்கப்பட்ட அறிக்கையின் படி, 24,400 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் பணியாளர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டுவருகின்றனர். எவ்வாறாயினும், உறைபனி நிலைமைகள் மற்றும் மழை காரணமாக இந்த முயற்சிகளுக்கு தடங்கல் ஏற்படலாம் என்ற கவலை வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஐ.நா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோவிலிருந்தும், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், ஈராக், ஈரான், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, கிரீஸ், பாகிஸ்தான் போன்ற பல நாடுகளில் இருந்தும் உதவிகள் கிடைப்பெற்றுவருவதாக துருக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு - குணமானோரின் எண்ணிக்கையும் 1057 ஆக அதிகரிப்பு – சுகாதார ...
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் - இழப்பீடாக மேலும் 2.5 மில்லியன் டொலர்கள் - கடல்சார் சூழல் பாதுகா...
சீனா, இந்திய உறவுகளை பிராந்திய ரீதியாகவும் உலகளாவிய ரீதியிலும் விரிவுபடுத்துவதே ஜனாதிபதியின் இலக்கு ...