திரிபோஷாவுக்கு வரிச் சலுகை – அரசாங்கம் அறிவிப்பு!
Sunday, May 21st, 2023
திரிபோஷா உற்பத்திக்கான சோளத்தை இறக்குமதி செய்வதற்கு வரிச் சலுகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய லங்கா திரிபோஷ நிறுவனத்திற்கு இந்த வரிச் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் சோளத்திற்கு 75 ரூபாவாக இருந்த விசேட வர்த்தக வரியை 25 ரூபாவாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வரிச் சலுகை மே மாதம் 18 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேரிச்சம்பழம் இறக்குமதிக்கு வழங்கப்பட்டு வந்த வரிச் சலுகையை மே 18 ஆம் திகதி முதல் நீக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மீற்றர் வட்டி சட்டவிரோதமானது - யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்!
மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கை வருகை !
புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசா...
|
|
|


