மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கை வருகை !

Tuesday, July 20th, 2021

மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி இப்ராஹிம் சோலிக்கு இலங்கை அரசு சார்பாக சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாலைத்தீவு ஜனாதிபதி தனது பதவிக்காலத்தில் இலங்கை வரும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னதாக இலங்கையின் 71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் பொருட்டு, 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 3 ஆம் திகதி பிரதம அதிதியாக இலங்கை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அவர் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்.

Related posts:


அரச அதிகாரிகளுக்கு எதிரான முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றச்சாட...
அரைவாசி கட்டணத்தையே அறவிட தீர்மானம் - அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் தெர...
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் பதவியிலிருந்து விடைபெற்றார் கோபால் பாக்லே - புதிய உயர்ஸ்தானிகரைாக பத...