தினமும் 3 லீட்டருக்கு அதிகமாக நீர் அருந்துங்கள் – யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் யமுனாநந்தா வலியுறுத்து!
Monday, April 17th, 2023
தினமும் மூன்று லீட்டருக்கும் அதிகமான நீரினை பருகுங்கள் என யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடுமையான வெப்பமான கால நிலை நிலவி வருவதனால், உடலில் உள்ள நீர் சத்துக்கள் இழக்கப்படும்.
அதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் மதிய நேரங்களில் வெளி பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.
தினமும் 3 லீட்டர் வரையில் நீர் அருந்துங்கள். அத்துடன், போதியளவு நீராகாரங்கள் அருந்துங்கள். நீர் தன்மையுள்ள வெள்ளரி பழம் போன்றவற்றை உண்ணுங்கள்.“ எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உண்மையான ஜனநாயகம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மஹிந்த தேசப்பிரிய
டெங்கு நோயைக் கட்டுப்படுத்த சுகாதாரப்பிரிவினர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!
மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை - சுகாதார அமைச்சு!
|
|
|


