வட இலங்கைச் சங்கீத சபையின் ஏற்பாட்டில் அகில இலங்கை வதிவிடக் கருத்தரங்கும் செயலமர்வும்!

Wednesday, March 23rd, 2016

வட இலங்கைச் சங்கீத சபை அகில இலங்கை ரீதியாக நடாத்தும் தரம்-5, தரம்-6 பரீட்சார்த்திகளுக்கான வதிவிடக் கருத்தரங்கும் செயலமர்வும் கடந்த-19  ஆம் திகதி சனிக்கிழமை முதல் இன்று 22 ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை வரை தொடர்ச்சியாக நான்கு தினங்கள் மருதனார்மடம் வட இலங்கைச் சங்கீத சபையின் கலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கு நிகழ்வில் 250 வரையான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த கருத்தரங்கும் செயலமர்வும் வருடா வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெறும் முதலாம் தவணைப் பரீட்சைக்கு முன்னோடியாக  நடைபெற்று வருகிறது.மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்தும் வகையிலும், ஆளுமையை விருத்தி செய்யும் வகையிலும்  இந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.

சங்கீதம், நடனம், மிருதங்கம், பண்ணிசை, நாடகம் ஆகிய பாடங்களுக்குத் துறைசார் விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சியினை வழங்கினர் . இதன் போது கற்பித்தல் முறைகள் சம்பந்தமான விரிவுரைகள் துறை சார்ந்த வகையில் நடாத்தப்பட்டன. மூன்று நாட்களாக முழு நேரக் கருத்தரங்கு நடாத்தப்பட்டதுடன் நேற்று அரை நாள் கருத்தரங்கும் நடாத்தப்பட்டது.  இந்தக் கருத்தரங்கு நிகழ்வில் வடமாகாணம், கிழக்கு மாகாணம் உட்பட  கண்டி, நுவரெலியா, பதுளை  உட்படப் பல மாவட்டங்களிருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். இந்தக் கருத்தரங்கு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த வெளிமாவட்டப் பிள்ளைகள் தங்கியிருப்பதற்கு வட இலங்கைச் சங்கீத சபை இலவச தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது.வட இலங்கைச் சங்கீத சபையின் நிர்வாகச் செயலாளர் முத்தையா அருளையா  தெரிவித்தார்.

இதேவேளை கருத்தரங்கின் முடிவுத் தினமான நேற்றைய  தினம் கடந்த வருடம் “கலா வித்தகர்” பட்டம் பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

96be6abe-3d76-4d14-8bb2-ea181082a507

Related posts: