திடீர் சுகயீனம் – யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ் சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு!

Monday, August 19th, 2024

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (18) உயிரிழந்தார்.

கொழும்பு 12 ஐச் சேர்ந்த 44 வயதுடைய இந்த நபர் பண கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் யாழ்ப்பாண நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறை வைக்கப்பட்டிருந்ததாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அக்கைதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் பின்னர் சிறைச்சாலை அதிகாரிகளின் கண்காணிப்பில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் யாழ்.காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: