தாளையடியில் செப்பனிடப்படும் உள்ளக வீதி…!

Friday, October 14th, 2016

வடமராட்சி கிழக்கு தாளையடியில் உள்ளக வீதி செப்பனிடப்பட்டு வருவதை பருத்தித்துறை பிரதேசசபையின் முன்னாள் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் பார்வையிட்டார்.

தாளையடி தபாற்கந்தோர் அருகிலுள்ள குடியிருப்பு வீதி சுமார் 195 மீற்றர் புனரமைக்கப்பட்டுள்ளது. தாளையடி கிழக்கு முதலாம் ஒழுங்கையில் 30 மீற்றர் மட்டுமே புனரமைக்கப்பட்டுள்ளது. அதிலும் 10 மீற்றர் வரை தார் ஊற்றப்படவில்லை. குறித்த வீதி  தொடர்பாக ஊர் மக்களுடன் கலந்துரையாடிய போது அதனை முழுமையாக செப்பனிடப்பட வேண்டுமெனவும் அவ்வொழுங்கையில் மேலும் வீட்டுத்திட்டப் பயனாளிகள் வீடுகளை அமைக்கவுள்ளதாகவும் கூறினர்.

unnamed (3)

தம்மிடமுள்ள ஒதுக்கீட்டு நிதியில் மேலும் 58 மீற்றர் வரை செப்பனிடுவதற்கு தயாராக உள்ளதாகவும் தாளையடி கிராம சமூக மட்ட அமைப்புக்கள் எந்த வீதியைச் செப்பனிடுவது என பரிந்துரை செய்து தந்தால் தாம் 58 மீற்றர் வரை வீதியைப் புனரமைப்போம் என பிரதேசசபை வட்டாரம் தெரிவித்துள்ளது.

unnamed (1)

மேலும் தாளையடியில் புனரமைக்கப்பட்டும் உள்ளக வீதி ஒன்றில் இடம்பெற்ற முறைகேடு மற்றும் ஊழல் விடயமாக ஒப்பந்தகாரருக்கும் மேற்பார்வையாளருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு தொடர்பாக எழுந்த பிரச்சினையைத் அடுத்து மேற்பார்வையாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக யாழ்.மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் மருதங்கேணி பொலிஸ் நிலையத்திலும்; முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

unnamed

Related posts: