இலங்கையில் கொரோனாவால் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதழிகமானோர் பாதிப்பு : 941 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Sunday, May 16th, 2021

இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரையில் ஒரு இலட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு இந்த தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 941ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளன.

அதேநேரம் கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் நாட்டில் இரண்டாயிரத்து 386 பேருக்குக் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின்  மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 471ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் ஒரு இலட்சத்து 17 ஆயிரத்து 220 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 22 ஆயிரத்து 310 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 20 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 941ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: