அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் பதவி வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம் – நீதி அமைச்சு!

Thursday, September 17th, 2020

அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் நிலவும் இரசாயன பரிசோதகர் பதவி வெற்றிடங்களுக்கு புதிதாக 28 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரசாயன பகுப்பாய்வு தொடர்பிலான அறிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. இதனால், இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை வெளியிடுவதிலும் தாமதம் ஏற்படுவதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அறிக்கை வழங்கும் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்காக இரண்டு சேவைப் பிரிவுகளை உள்ளடக்க, தற்போதைய இரசாயன பகுப்பாய்வாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நீதியமைச்சு குறிப்பிட்டுள்ளது

இதனடிப்படையில், அறிக்கைகளை வழங்கும் செயற்பாடுகளை விரைவுபடுத்தும் நோக்கில் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகளை இணைத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

வழக்கு செயற்பாடுகளின் தாமதத்திற்கான பிரதான காரணமாக, இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கைகளின் தாமதம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: