தாஜுதீன் கொலை: விசாரணையை விரைவில் முடிக்க நடவடிக்கை – நீதியமைச்சர்!

Friday, November 10th, 2017

பிரபல ரஹ்பி வீரர் தாஜுதீன் கொலை வழக்கில் எனது அமைச்சுக்குட்பட்ட நிறுவனங்களில் ஏதும் தாமதம் இருந்தால் அதைத் தேடிப் பார்த்து துரித கதியில் விசாரணையை முடிக்க நடவடிக்கை எடுப்பேன் என . நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற நீதித்துறை திருத்தச் சட்ட வரைவு, குற்றச்செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு திருத்த சட்ட வரைவு, குற்றச்செயல்களை தடுத்தல் திருத்த சட்ட வரைவு என்பன மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது.

கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான விமல் வீரவன்ச இராணுவ தண்டிப்பதற்கு வலுக்கட்டாயமாக காணாமல் போவதில் இருந்து பாதுகாப்பு சட்டம் கொண்டு கொண்டு வரப்படுகின்றது என்று கூறுகின்றார்.

நாம் எவரின் அழுத்தம் காரணமாகவும் இந்தச் சட்டத்தைக் கொண்டு வரவில்லை.குற்றச்செயல் வழக்குகளின் சாட்சியாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத குறைப்பாடு நிலவுவதாலேயே நாம் இந்த சட்டத்தை கொண்டு வந்தோம்.

இது எமது நீதித்துறை கட்டமைப்புக்கு தேவையான ஒன்றாகும். தேவையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில் நியாயமில்லை.வழக்குகளை துரிதப்படுத்துவதற்கு தேவையான சட்டத்திருத்தங்கள் பல எதிர்வரும் காலங்களில் நாம் சபைக்கு ஆற்றுப்படுத்தவுள்ளோம்.

வசிம் தாஜுதீன் வழக்கு தொடர்பாக நாடாளுமுன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மிகவும் ஆவேசமாக பேசியிருந்தார். வசிம் தாஜுதீனின் கொலை வழக்கில் எனது அமைச்சுக்குட்பட்ட நிறுவனங்களில் ஏதும் தாமதம் இருந்தால் அதனை தேடிப் பார்த்து துரித கதியில் விசாரணையை நிறைவு செய்வதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

Related posts: