தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் சட்டத்திவிருந்து தப்பிக்க முடியாது – உயிர்த்த ஞாயிறு வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதி!
Sunday, April 4th, 2021
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ சட்டத்தில் இருந்து தப்பிக்க இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறாத வகையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதியுடன் செயற்பட்டுவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினம் குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி –
யேசுபிரான் உயிர்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் உயிர்த்த ஞாயிறு சிறப்பு நாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்றையதினம் உலகளாவிய ரீதியில் உயிர்த்த ஞாயிறு தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில், உலக நாடுகள் எதிர்நோக்கியுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வுகிட்ட பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த 2019 ஆண்டு இதேபோன்ற உயிர்த்த ஞாயிறு தினத்திலேயே, நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் சிலவற்றில் பயங்கரவாத குழுக்களினால் தற்கொலை தாக்ககுதல் மேற்கொள்ளப்பட்டதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ சட்டத்தில் இருந்து தப்பிக்க இடமளிக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


