தாக்குதலுக்குள்ளான உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார்!
Monday, September 5th, 2016
மலேசியாவில் தாக்குதலுக்குள்ளான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசியாவில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை கருத்திற்கொண்டு அவர் மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை உயர்ஸ்தானிகர் நேற்று அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டார்.மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள வானூர்தி தளத்தில் வைத்து அவர் இவ்வாறு அடையாளம் தெரியாத சிலரால் தாக்கப்பட்டார்.
இதேவேளை, மலேசியாவிற்கு சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
முன்னாள் பிரதமர் டி.எம்.ஜயரட்னவின் பூதவுடல் நாடாளுமன்றத்தில்!
2010 இல் ஆரம்பித்த பணிகளை முழுமைப்படுத்தவே அமைச்சர் டக்ளஸ் நேரில் வந்துள்ளார் – வடக்கு மாகாண சபையின்...
இலங்கையில் நடைபெற்று வரும் கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவை வழங்குவதாக பெலாரஸ் கல்வியமைச்சர் உறுதியள...
|
|
|


