2010 இல் ஆரம்பித்த பணிகளை முழுமைப்படுத்தவே அமைச்சர் டக்ளஸ் நேரில் வந்துள்ளார் – வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் தவநாதன் சுட்டிக்காட்டு!

Tuesday, January 19th, 2021

2009 ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பில் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளில் ஒருவரை கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கென நியமித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அந்தப் பணிகளை முழுமைப்படுத்த தற்போது நேரடியாக தானே கிளிநொச்சி மாவட்டத்தைப் பொறுப்பேற்றுள்ளார் என அமைச்சரின் இணைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் தெரிவித்துள்ளார்.

கண்டாவளை பிரதேச செயலகத்தின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழான மனைப்பொருளாதாரத்தை மேம்படுத்தும் பழமரக்கன்று விநியோக ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் – 2010ஆம் ஆண்டு தேர்தலில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவானதும், தமது உறுப்பினர்களில் ஒருவரை கிளிநொச்சி மாவட்டத்தை அபிவிருத்திசெய்வதற்கான விசேடமாக அனுப்பிவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.  அமைச்சரின் வழிகாட்டலின் கீழ் 2010 முதல் 2015 வரையில் இந்த மாவட்டத்தின் மீள் குடியேற்றம் முதல் உட்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவது வரையில் ஏராளமான பணிகள் வேகமாக முன்னெடுக்கப்படுவதற்கு அவரது இந்த முன்முயற்சியே காரணமாக இருந்தது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக 2015 ஆம் ஆண்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கம் வகித்த அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கான மக்களாணை கிடைக்காத காரணத்தினால், இந்த மாவட்டத்தில் அவர் முன்னெடுக்க ஆரம்பித்த பணிகளை முழுமைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது என்று தெரிவித்த வை.தவநாதன்,  இந்தப் பணியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டவர் இடையில் வழிமாறிச் சென்றுவிட்ட நிலையில், இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியை தானே முன்னின்று மேற்கொள்வதற்காக இம்முறை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைமைப் பொறுப்பை அவரே ஏற்றுள்ளார்.

இன்று இங்குள்ள மக்கள் மத்தியில் புதிய வீடுகளுக்கான தேவைப்பாடுகள் குறைந்துள்ளன. மின்சார இணைப்புக்களுக்கான கோரிக்கைகள் குறைந்துவிட்டன. இதற்குக் காரணம் 2010 முதல் 5 ஆண்டுகளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிப்படுத்தில் இந்த மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள்தான்.

இடையில் ஆட்சி மாற்றத்தினாலும், பொறுப்பாக நியமிக்கப்பட்டவரின் மாற்றத்தினாலும் தடைப்பட்டுப்போன இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியை முழுமைப்படுத்துவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தானே இம்முறை நேரடியாக ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவராக களத்தில் இறங்கியிருக்கிறார்.

இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த மாவட்ட மக்களுடைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்பதற்கு அனைவரும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்றம் அவர் இதன்போது கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

Related posts: