தவறான ஆலோசனை காரணமாக நெல் களஞ்சியத்தின் பல்வேறு பிரிவுகள் வீழ்ச்சி – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே!
Saturday, January 2nd, 2021
அரிசி தொடர்பான ஊழலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு விவசாய அமைச்சு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
நீண்டகாலமாக முறையான ஒரு திட்டமில்லாமையே நுகர்வோருக்கு அதிக விலைக்கு அரிசியை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சருக்கும் நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். சிலர் இணைந்து அரிசி ஏகாதிபத்திய கொள்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தவறான ஆலோசனை காரணமாக நெல் களஞ்சியத்தின் பல்வேறு பிரிவுகள் வீழ்ச்சியடைந்திருப்பதாக நெல் ஆலை உரிமையாளர்கள் இதன் போது சுட்டிக்காட்டினர்
Related posts:
இலங்கைக்கு கிடைத்த பாரிய பொக்கிஷம்!
நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கிச் சூடு! சந்தேகநபர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
கொவிட் தொடர்பான தவறான தகவல்கள் அடங்கிய சுமார் ஒரு மில்லியன் காணொளிகள் யூரியூப் தளத்திலிருந்து நீக்கம...
|
|
|


