தற்போதைய பாடத்திட்டங்கள் நாட்டின் தேவைகருதியதாக இருக்கவில்லை – விரைவில் புதுப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு!
Monday, March 15th, 2021
நாட்டின் பொருளாதார தேவை மற்றும் தொழில் வாய்ப்புக்களுக்கு நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பாடத்திட்டத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்கள், ஏற்புடையது அல்ல என்பதை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஊடாக பாடத்திட்டத்தை புதுப்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாடசாலை பாடத்திட்டங்கள் மாத்திரமன்றி, பல்கலைக்கழக பாடத்திட்டங்களும் தற்போதைய தொழில் வாய்ப்புக்களுக்கு இணைந்ததாக இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி மறுசீரமைப்பின் ஊடாக, தகவல், கணனி பாடத்திட்டம் உள்ளிட்ட பாடத்திட்டங்களை உள்வாங்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
சட்டவிரோதமாக குடாநாட்டுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு – தகவல் தருமாறு அரச அதிபர் கோரிக்கை!
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளது - அரச அச்சகர் தகவல்!
2024 ஆம் ஆண்டின் நடுப்பகுயில் நாட்டில் கடுமையான வரட்சி ஏற்படும் - நிபுணர்கள் எச்சரிக்கை!
|
|
|


