தற்போது நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் புத்தாண்டு வரை நீடிக்கும் – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!

Monday, April 11th, 2022

தற்போது நிலவும் சீரற்ற வானிலை எதிர்வரும் புத்தாண்டு வரையில் நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேநேரம் அதிக மழைக்காரணமாக இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் திறந்து விடப்பட்ட 6 வான்கதவுகளில் 4 தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன.

அத்துடன் அங்கமுவ நீர்த்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின், 5 வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ளன.

இதேவேளை, நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

பதுளை, கொழும்பு, களுத்துறை, கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு நேற்று முதல் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய அறிகுறிகள் உள்ள பகுதிகளில், இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நாட்டில் நிலவும் அதிக மழையுடனான வானிலை காரணமாக சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, நெலுவ – எம்பலேகெதர வீதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட சிறுவனொருவன் நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் எம்பலேகெதர பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனொருவனே இவ்வாறு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ஹங்குராங்கெத்த, ஹேவாஹெட்ட – முல்லோயா தோட்ட மேல் பிரிவில் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பெண்னொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 55 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

ஒக்ரோபரில் உயர்தர பரீட்சை – அடுத்து ஆண்டு ஜனவரியில் சாதாரண தர பரீட்சை - நடத்த தீர்மானித்துள்ளதாக பி...
குத்தகை நிறுவனங்கள் அடியாட்களை பயன்படுத்தி வாகனங்களை எடுத்துச்செல்ல முடியாது - குத்தகை மற்றும் கடன் ...
தெற்கு லெபனானில் நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினர்கள் காயம்!

பதிவு செய்யப்படாத கையடக்க தொலைபேசிகள் இரத்தாகும் - இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு!
நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு கடன் உதவி வழங்குங்கள் - சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா கோரிக்கை!
இலங்கையின் உள்விவகாரங்களில் சர்வதேச விசாரணைகள் என்ற யோசனையை அரசாங்கம் அங்கீகரிக்காது - ஜனாதிபதியின்...