தரம் 5 பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களுக்கு தடை!

16ஆம் திகதி நள்ளிரவு தொடக்கம் 20ஆம் திகதி பரீட்சை நிறைவடையும் வரை 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புக்கள் விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேபோல், பரீட்டை வினாத்தாள்களில் இருக்கும் வினாக்களை பெற்றுத்தருவதாகவோ அல்லது மாதிரி வினாத்தாள்களை பெற்றுத்தருவதாகவோ தெரிவித்து போஸ்டர், பதாதை, துண்டு பிரசுரங்கள் இணைய அல்லது அச்சு ஊடகங்களின் மூலம் விளம்பரம் செய்தல் மற்றும் அதுபோன்ற விடயங்களை தம்வசம் வைத்துக் கொள்ளல் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது. தனிநபர் அல்லது நிறுவனமொன்று இந்த உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பரீட்சை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
Related posts:
யாழ்ப்பாணத்தில் இரு கிராமங்கள் உள்ளிட்ட 6 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!
எரிவாயு விநியோகம் தொடர்பில் எந்த அச்சமும் தேவையில்லை - இன்றுமுதல் வழமையான விநியோகம் இடம்பெறுவதாக லிற...
நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இரண்டாம் மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின்கட்டமைப்புடன் இணைவு - இல...
|
|