தரம் 13 வரை உறுதிப்படுத்தப்பட்ட கல்வி: இரண்டாம் கட்டம் ஆரம்பம்!

Thursday, May 17th, 2018

தரம் 13 வரை உறுதிப்படுத்தப்பட்ட கல்வித் திட்டத்தின் இரண்டாம் கட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் 150 பாடசாலைகளைச் சேர்ந்த 14 ஆயிரம் மாணவர்களுக்கு தொழில்சார் பாடவிதானத்தில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். கடந்த ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்ட வேலைத்திட்டத்தின் கீழ் 42 பாடசாலைகளை சேர்ந்த இரண்டாயிரத்து 400 மாணவர்கள் தொழில்சார் பாடங்களை கற்றுவருகிறார்கள்.

இதற்குத் தேவையான இரண்டாயிரத்து 400 ஆசிரியர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட 150 பாடசாலைகளில் 417 ஸ்மார்ட் வகுப்பறைகளும் அமைக்கப்படவிருக்கின்றன.

இந்தப் பாடநெறியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும், சித்தியடையாத மாணவர்களுக்கும் இணைந்து கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட முதற்கட்ட வேலைத்திட்டத்தின் கீழ் 42 பாடசாலைகளை சேர்ந்த இரண்டாயிரத்து 400 மாணவர்கள் தொழில்சார் பாடங்களை கற்றுவருகிறார்கள்.

இதற்குத் தேவையான இரண்டாயிரத்து 400 ஆசிரியர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட 150பாடசாலைகளில் 417 ஸ்மார்ட் வகுப்பறைகளும் அமைக்கப்படவிருக்கின்றன.

இந்தப் பாடநெறியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும், சித்தியடையாத மாணவர்களுக்கும் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகிடைக்கும்.

Related posts: