தரம் 1 மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் விநியோகம்!
Friday, January 20th, 2017
பாடசாலைகளின் தரம் ஒன்று மாணவர்களுக்கான சீருடைகளுக்குரிய வவுச்சர் தற்போது வழங்கப்பட்டுவருவதாக கல்வி அமைச்சின் இராஜாங்க செயலாளர் திஸ்ஸ ஹேவா விதாரண தெரிவித்துள்ளார்.
தரம் ஒன்றுக்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படாததால் இந்தப் பண வவுச்சரை வழங்கும் பணிகள் பிற்போடப்பட்டிருந்தன.
கடந்த 11ம் திகதி தரம் 1இற்கு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளும் நடவடிக்கை அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் இடம்பெற்றது. இதனைத்தொடர்ந்து மாணவர்களுக்கான சீருடைகளுக்குரிய வவுச்சர் தற்போது வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
விபத்துக்களால் இவ்வாண்டு உயிரிழப்பு அதிகம் - அமைச்சர் சகால தெரிவிப்பு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு முழுமையான ஆதரவு - த...
மழையுடனான வானிலை - தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
|
|
|


