தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை திருத்த தீர்மானம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை இந்த வருடம்முதல் திருத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி பரீட்சாத்திகளுக்கு பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பாகம் முதலில் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வினாத்தாளின் பகுதி – I பின்னர் வழங்கப்படும். இதன்கீழ் 2022, டிசம்பர் 18, இல் திட்டமிடப்பட்ட 2022 தரம் 05 புலமைப்பரிசில் கால அட்டவணை:
பகுதி II (60 பல தேர்வு மற்றும் குறுகிய பதில் கேள்விகள் , முற்பகல் 09.30 மணி முதல் 10.45 மணி வரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள், பகுதி I 40 பல் தேர்வு கேள்விகள், முற்பகல் 11.15 மணி முதல் 12.15 மணி வரை. ஒரு மணி நேரம் என்ற அடிப்படையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
விமானியற்ற பறக்கும் இயந்திரங்கள்: நெறிமுறைகள், சட்டப்பிரமானங்கள் மற்றும் வழிகாட்டல்கள்!
மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு!
யாழ்.குருநகர் பகுதியில் கடலாமை இறைச்சியுடன் நால்வர் விசேட அதிரடிப் படையினரால் கைது !
|
|