தரம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வங்கிக் கணக்கு – சமூக அக்கறையாளர் விந்தனின் செயற்பாட்டுக்கு மக்கள் பாராட்டு!

Wednesday, July 31st, 2024

தரம் ஒன்று சிறார்களுக்கு பாடசாலை கல்வியை ஊக்குவிக்கும் நோக்குடனும் சேமிப்பு பழக்கத்தை ஊக்கமூட்டும் வகையிலும் புலம்பெயர் தேச அக்கறையாளர் ஒருவரால் வடமராட்சி பிரதேசத்தில் உள்ள தெரிவு செய்டயப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒரு தொகுதியினருக்கு வங்கிக் கணக்குகள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சுவிசர்லாந்து தேசத்தில் வாழும் செல்லத்தம்பி சிவச்செல்வம் (விந்தன்) என்ற சமூக அக்கறையாளரால் தான் பிறந்த பிரதேசத்தில் வாழும் மூன்று பாடசாலைகளை உள்ளடக்கிய வகையில் குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் யா/ தேவரையாளி இந்துக்கல்லூரி, யா/அல்வாய் சிறீலங்கா வித்தியாசாலை, யா/வதிரி வடக்கு மெ.மி.த.க பாடசாரை அகியவற்றில் இவ்வாண்டு பதிதாக தரம் ஒன்றுக்கு உள்ளாங்கப்பட்ட மாணவர்களை மையப்படுத்தியே குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சமூக அக்கறையாளரான சிவச்செல்வம் தனது 60 ஆவது அகவையை முன்னிட்டே குறித்த மூன்று பாடசாலைகளிலும் இணைந்துள்ள தரம் ஒன்று மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் நிதியை ஆரம்ப நிதியாக கொண்ட வங்கிக் கணக்கை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

இதற்கான நிகழ்வு அண்மையில் தேவரையாளி இந்துக் கல்லூரியில் குறித்த  பாடசாலையின் அதிபர்  செல்வானந்தனின் தலைமையில் நடைபெற்றது.

சிவச்செல்வத்தின் இந்த செயற்பாட்டை பாராட்டியுள்ள குறித்த பிரதேச பெற்றோர்கள் மற்றும் பொதுநலன் விரும்பிகள், இவரைப்போன்று புலம்பெயர் தேசங்களில் வாழும் உறவுகள் இவ்வாறான செயற்பாடுகளை தாயகத்தில் வாழும் மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து அவர்களது கல்வியையும் பொருளாதார நிலைமைகளையும் மேம்படுத்து வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


யாழ்ப்பாணத்தில் பொதுச் சந்தைகள் மற்றும் உணவகங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளமையால் மோசமடைந்து செல்லும...
கொரோனா அச்சுறுத்தல் - யாழ்.பல்கலையின் கிளிநொச்சி வளாக மாணவர்களை வீடுகளுக்கு அனுப்ப தீர்மானம்!
பரீட்சை நடைபெறும் தினங்களில் ஆரம்ப வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள மாகாண பணி...