பரீட்சை நடைபெறும் தினங்களில் ஆரம்ப வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள மாகாண பணிப்பாளர்களுக்கு அதிகாம் – கல்வி அமைச்சு சுற்றறிக்கை!

Thursday, February 3rd, 2022

உயர்தர பரீட்சை நடைபெறும் தினங்களில் ஆரம்ப வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சினால் மாகாண பணிப்பாளர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 7 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரை உயர்தர பரீட்சை நடைபெறவுள்ளது.

இருப்பினும் இந்த காலப்பகுதியில் ஆரம்ப வகுப்பு கல்வி நடவடிக்கைகளை நடத்த வேண்டும் என கல்வி அமைச்சு இதற்கு முன்னர் தெரிவித்திருந்தது.

இருப்பினும் இவ்வாறு ஆரம்ப தர வகுப்புகளை நடத்துவதினால் உயர்தர பரீட்சைக்கு இடையூறு ஏற்படுமானால் சம்பந்தப்பட்ட பணிப்பாளர்கள் ஊடாக மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவிக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதற்கு அமைவாக ஆரம்ப தர வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையை வழங்குவதற்கு மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, க.பொ.த உயர்தரப் பரீட்சையின் காரணமாக அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி எதிர்வரும் மார்ச் 07 ஆம் திகதி வரை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட ஊடகவியலாளர் மொஹான் சமரநாயக்க கடமைகளை ப...
அரசியல் சவால்களை வெற்றிகொள்ள அனைத்து இலங்கையர்களும் ஒன்றாக கைகோர்க்க வேண்டிய நேரம் இது - ஜனாதிபதி கோ...
சர்வதேச நாணய இடமிருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் அடுத்த மாத நடுப்பகுதியில் அமுலாகும் – பிரதமர்...