தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை நம்பி நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம் – வலி கிழக்கு மக்கள் ஆதங்கம்!

Tuesday, February 14th, 2017

ஆட்சி மாற்றத்தின் பின்னர் நாம்  மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோதும் எமது அடிப்படை தேவைகள் மற்றும் ஏனைய தேவைகள் தொடர்பாக தமிழ்  தேசியக் கூட்டமைப்பினர் அக்கறையற்று இருப்பது வாக்களித்து வெற்றிபெறச் செய்த எமக்கு பெருத்த ஏமாற்றத்தையே தருகின்றது என வலிகாமம் கிழக்கு மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்றையதினம் இடம்பெற்ற குறைகேள் சந்திப்பிலேயே மக்கள் இவ்வாறு கவலை தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு பங்குனி மாதம் வளலாய் வடக்கு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டு நாம் மீள் குடியேற்றப்பட்டிருந்த போதிலும் எமது அடிப்படை வசதிகள் இதுவரையில் முழுமையாக பூரணப்படுத்தப்படாத நிலைமையே காணப்படுகின்றது.

இதனால் நாம் நாளாந்தம் பல்வேறுபட்ட நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றோம். குறிப்பாக குடிநீர், மின்சாரம், வீட்டுத்திட்டம் உள்ளடங்கலான அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கப்பெறாமையால் பல அசௌகரியங்களை சந்திக்கவேண்டியுள்ளது.

குறிப்பாக கடற்றொழிலை நம்பிவாழும் குடும்பங்கள் வான்அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படாத காரணத்தினால் தொழில் செய்யமுடியாத நிலையில் வாழ்ந்துவருவதாகவும், தேர்தல்காலங்களில்   நிறைவேற்றப்பட முடியாத வாக்குறுதிகளை உணர்ச்சி பொங்க எமக்கு வழங்கி எமது வாக்குகளை அபகரித்து தேர்தல்களில் வெற்றிகளைப்பெற்று அரசியல் அதிகாரங்களை கையகப்படுத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் எமது பிரச்சினைகள் மற்றும் நாம் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் தெடர்பில் பாராமுகமாகவே இற்றைவரைக்கும் இருந்துவருகின்றனர் என்றும் கவலை தெரிவித்தனர்.

இச்சந்திப்பின்போது குறித்த பகுதி மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்தறிந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தேவைப்பாடுகளின் அடிப்படையில் அவற்றுக்கான திட்டங்களை தம்மிடம் சமர்ப்பிக்குமாறும் அதுவிடயங்கள் தொடர்பில் தாம் துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்தரையாடி தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன், யாழ் மாநாகரசபை முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோருடன் கட்சியின் குறித்த பிரதேச நிர்வாக உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

6

2

Related posts: