தமிழ் மகளிர் ஜனநாயக அணியின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினம் அனுஸ்டிப்பு!
Wednesday, March 8th, 2017
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு “தமிழ் ஜனநாயக மகளிர் ஜனநாயக அணி” யினரது ஏற்பாட்டில் மகளிர் தினம் யாழ்.நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது
யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட கூட்டுறவு சபை செயலாளர் திருமதி வேதவல்லி செல்வரட்ணம் பிரதம உரையினை வழங்கியிருந்தார்.
அத்துடன் பெண்ணிய செயற்பாட்டாளரான செல்வி தம்பிப்பிள்ளை இருதயராணி, மாதர் சங்க செயலாளரும் சமூக சேவையாளருமான திருமதி உதயகாந்த் குருப்பிரியா, மாவட்ட மகளிர் சம்மேளன செயலாளர் திருமதி வரதராஜன் சசிரேகா, மானிப்பாய் மாதர்சங்க தலைவி திருமதி பரஞ்சோதிநாதன் நளினி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தமிழ் மகளிர் ஜனநாயக அணியினரால் அனுஷ்டிக்கப்பட்ட மகளிர் தின நிகழ்வுகளின்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது மகளிர் தின வாழ்த்துச் செய்தியை செல்வி தார்மினி விநாயகமூர்த்தி அவர்களால் வாசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் பகுதி மாதர் சங்க தலைவி திருமதி ஜெகதீசன் தயாழினி அவர்களால் வரவேற்புரையும் வல்வெட்டித்துறை நகரசபை முன்னாள் எதிர்க்கட்சித்தலைவி திருமதி இந்திரன் கைலாயினி நன்றியுரையும் வழங்கியிருந்தனர்.



Related posts:
|
|
|


