சிவில் பாதுகாப்பு படை திணைக்களம் தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வருகிறது – பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன!

Wednesday, December 9th, 2020

தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் சிவில் பாதுகாப்பு படை திணைக்களம் தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வருவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தாய்நாட்டுக்கான சேவையை உயரிய முறையில் மீண்டும் வழங்குவதற்காக ஓய்வு பெற்ற பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

சில ஒழுக்கமற்ற கடமைகளில் சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டதை 2016 இல் ஓய்வு பெற்றவேளையில் தான் அவதானித்ததாகவும், சிவில் பாதுகாப்பு திணைக்களம் குறிப்பிட்ட காலத்தில் கொள்கையற்ற பணிகளில் ஈடுபட்டது வருத்தமளிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

போருக்குப் பின்னரான காலத்தில் சிவில் பாதுகாப்பு படையின் முன்னையநாள் பெருமையை நினைவுகூர்ந்த அவர், “போர் வெற்றிகரமாக முடிந்தபின்னர், சிவில் பாதுகாப்பு படையின் பலம், அபிவிருத்தி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது” என்றார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த போது சிவில் பாதுகாப்பு படையை மீள்கட்டமைப்பு செய்து நாட்டுக்கு பாரிய சேவையை வழங்கியதாக மேஜர் ஜெனரல் குணரத்ன குறிப்பிட்டார்.

இறுதியில், அவர்கள் எல்லைப்புற கிராமங்களில் மிலேச்சத்தனமான பயங்கரவாதிகளை தோற்கடித்த அதேவேளை, ஒரு இராணுவம் போலவே தங்கள் கடமையைச் செய்தனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: