தமிழரது தீர்வு விடயத்தில் அக்கறையுடன் இருக்கின்றேன் – இலண்டனில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவிப்பு!
Sunday, May 7th, 2023
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் தாம் அக்கறையாக உள்ளதாக இலண்டன் சென்றுள்ள ஜகாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் புத்திஜீவிகளுடனான சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து மன்னருடைய முடி சூட்டு விழாவிற்கு சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடந்த வியாழக்கிழமை தமிழ் புத்திஜீவிகள் இரவு விருந்து வழங்கினர்.
இதன்போது தமிழ் புத்திஜீவிகள் மத்தியில் கருத்தைப் பகிர்ந்து கொண்ட போது, தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு விடயத்தில் நாம் கரிசனையாகச் செயல்படுகிறோம்.
அரசியல் தீர்வு விடயங்களை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தமிழ் கட்சிகளும் அரசாங்கத்தோடு இணைந்து ஒத்துழைப்புக்களை வழங்க முன்வருகிறார் என நினைக்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் காட்சிகளுடனான சந்திப்பு எதிர்வரும் சில தினங்களில் இடம்பெற உள்ள நிலையில், ஒரு தகவல் உரையாடலில் தமிழ் மக்களின் அரசியல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் விரிவாக கலந்துரையாட உள்ளதாக புத்திஜீவிகள் மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


