தமது பகலுணவை தானம் செய்யும் கைதிகள்.!

Sunday, May 22nd, 2016

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக் கைதிகள் தமது இரண்டு நாள் பகலுணவை வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு முன் வந்துள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபா ஆகியோர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள அனைத்துக் கைதிகளும் நேற்றும் இன்றும் தமக்கு வழங்கப்படும் பகலுணவை வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.

இந்த பகலுணவுக்காக செலவு செய்யும் நிதியினை சிறைச்சாலை தலைமையகத்தின் ஊடாக வெள்ள அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதேபோன்று மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் நிருவாகத்தின் கீழுள்ள கல்முனை சிறைக் கூட உத்தியோகத்தர்கள் தமது ஒரு நாள் சம்பளத்தினை வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க முன் வந்துள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் கல்முனை சிறைக் கூட உத்தியோகத்தர்கள் 135 பேர் இவ்வாறு தமது ஒரு நாள் சம்பளத்தினை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவுள்ளதாக மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம அத்தியட்சகர் கே.எம்.யு.எச்.அக்பர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபா ஆகியோர் மேலும் தெரிவித்தனர்.

Related posts: