தபால் சேவை சீர்குலைவு!
Friday, May 20th, 2016
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கொட்டும் கடும் மழை காரணமாக அப்பகுதிகளில் விநியோகிக்க வேண்டிய தபால் பொதிகள் மற்றும் கடிதங்கள் தற்போது தபால் திணைக்களத்தின் தலைமையகத்தில் தேங்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை வரை சுமார் ஐந்து லட்சம் கடிதங்களும் பொதிகளும் தேங்கியிருப்பதாக தபால் திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
இவற்றில் சாதாரண தபால் பொதிகள் மட்டுமன்றி பதிவுத் தபால் பொதிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. காலநிலை சீரற்ற தன்மை காரணமாக தபால் புகையிரதங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளமையும் தபால் விநியோகம் சீர்குலைவதற்கான ஒரு காரணமாக கூறப்படுகின்றது.
இதேவேளை, தற்போதைய நிலையில் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களுக்கான தபால் புகையிரதங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உதவிக்கு 1919 அழையுங்கள் - ஜனாதிபதி
வருடாந்தம் 25 ஆயிரம் இலங்கையர்கள் புகைத்தலால் உயிரிழப்பு!
மக்கள் நலனுக்காகவே ஊரடங்கு முறைமை : நிலைமைகளை பார்த்து அரசு சரியான முடிவை எடுக்கும் - இராணுவத் தளபதி...
|
|
|


