வருடாந்தம் 25 ஆயிரம் இலங்கையர்கள் புகைத்தலால் உயிரிழப்பு!

Tuesday, April 11th, 2017

வருடாந்தம் 25 ஆயிரம் இலங்கையர்கள் புகைத்தலால் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

புகைப்பவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக புகையிலை உற்பத்தியாளர்களுக்கு வேறு உற்பத்தி பொருட்களை அறிமுகப்படுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய திட்டங்களை வகுப்பதற்கு சுகாதார அமைச்சும், விவசாய அமைச்சும் ஒன்றிணைந்து  வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். வடமத்திய, வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களில்  அதிகளவு புகையிலை உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றன. அவர்களுக்கு வேறு உற்பத்தி பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய புகையிலை செய்கைக்கு பதிலாக சோயா, மிளகு போன்ற உற்பத்தி பொருட்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts: