தபால் ஊழியர்களின் பற்றாக்குறை – நாட்டின் சில பகுதிகளில் தபால் விநியோகம் தாமதமடைந்துள்ளதாக தபால் மா அதிபர் தெரிவிப்பு!
Tuesday, April 2nd, 2024
தபால் ஊழியர்களின் பற்றாக்குறையினால் நாட்டின் சில பகுதிகளில் தபால் விநியோகம் தாமதமடைந்துள்ளதாக தபால்மா அதிபர் பி. சத்குமார தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சில மாகாணங்களில் ஒரு நாள் தாமதமாக தபால் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலய அடிப்படையில் பிரிவுகளாக பிரித்து தபால் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. சுமார் 2,000 தபால் ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் தமது திணைக்களத்தில் உள்ளது.
தபால் திணைக்களத்தின் ஊழியர்கள் ஓய்வு பெற்ற நிலையில் புதிய ஊழியர்களை உள்வாங்காமையினால் குறிப்பிட்ட சேவைகளை தடைப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தாய்லாந்து பிரதமர் நாளை இலங்கை விஜயம்
தாதியர்களின் ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு : மேலும் இரு கோரிக்கைகளுக்கு பாதீட்டின் ஊடாக ஏற்பா...
சீனாவின் ஜனாதிபதியாக மூன்றாவது முறையாக ஐந்தாண்டு காலம் பணியாற்ற சீன மக்கள் கட்சியினால் ஏகமனதாக ஒப்பு...
|
|
|


