தபாலகங்கள் அனைத்தும் நாளைமறுதினம் மூடப்படும் – தபால் திணைக்களம் அறிவிப்பு!

நாடு முழுவதும் உள்ள தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்களில் எதிர்வரும் சனிக்கிழமை சேவைகள் இடம்பெறாதென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது தவிர்க்க முடியாத காரணங்களினால் அன்று நாடு முழுவதிலும் உள்ள தபாலகங்கள் மற்றும் உப தபாலகங்கள் சேவைகளுக்காக திறக்கப்படமாட்டாது என தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இதனால் பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் தபால் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பலத்த மழை பொழியக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை குற்றிகள் கைதடியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்பு!
றீமால் புயலின் - இலங்கையில் மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்!
|
|