தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை – ஆஸ்திரேலியா நீதிமன்றம் தெரிவிப்பு!

Friday, November 24th, 2023

இலங்கை  கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க தொடர்பிலான வழக்கு விசாரணைகளில் அவுஸ்திரேலியா பொலிஸார் நியாயமாக செயற்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா நீதிமன்றதினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தனுஷ்க குணத்திலக்கவிற்கு பொலிஸார் வழக்கு செலவுகளை செலுத்த நேரிடலாம் என அறிவித்துள்ளது.

32 வயதான இலங்கை தேசிய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணத்திலக்க சில மாதங்களுக்கு முன்னர், பாலியல் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டிருந்தார்.

ஆஸ்திரேலியா பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய முறைப்பாட்டுக்கு அமைய தனுஷ்கவிற்கு எதிராக அந்நாட்டு போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

எனினும் உரிய சாட்சியங்கள் இன்றி பொலிஸார் தனுஷ்க விவகாரத்தில் செயற்பட்டு உள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. நீண்ட காலம் தனுஷ்க சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நியாயமான காரணங்கள் இன்றி குறித்த பெண்ணின் முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தனுஷ்க குணத்திலக்க விடயத்தில் ஆஸ்திரேலியா பொலிஸார் சரியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறித்த பெண் சரியான ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டாளரின் முறைப்பாடு நம்பகமானதா என்பது கவனத்திற்கு கொள்ளப்படாது தனுஷ்கவிற்கு எதிராக பொலிஸார் விசாரணை நடத்தி உள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனவே வழக்கு செலவுகளை மீள செலுத்த நேரிடலாம் என ஆஸ்திரேலியா நீதிபதி சாரா ஹுகட் தெரிவித்துள்ளார்.

000

Related posts: