தனியார் பேருந்துகளை நடத்துநர்களின்றி இயக்க யோசனை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கையளிப்பு – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவிப்பு!
Saturday, April 16th, 2022
தனியார் பேருந்துகளை நடத்துநர்களின்றி, இயக்குவதற்கான யோசனை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமைக்கு மத்தியில், நடத்துநர்களுக்கு வேதனத்தை வழங்குதற்கான செலவை மீதப்படுத்தும் நோக்கில், இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
இதன்படி, பயணிகள், முற்கொடுப்பனவு அட்டை அல்லது கைத்தொலைபேசி செயலி மூலம், பேருந்து பயணக் கட்டணத்தை நேரடியாக பேருந்து உரிமையாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு வைப்பிலிடும் முறைமையைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொடுப்பனவு அட்டை நடைமுறை குறித்து பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. பேருந்துகளில், பணம் கொடுக்கல் வாங்கல் இடம்பெற மாட்டாது.
பேருந்துகளின் பின் கதவு மூடப்பட்டு, முன் கதவு வழியாக பயணிகள் ஏற்றப்பட்டு, முன் கதவு வழியாகவே இறக்கப்படுவார்கள். இந்த முறைமை குறித்து போக்குவரத்து அமைச்சுக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நடத்துநர் இன்றி பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ண தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


