34 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலினால் பாதிப்பு!

Sunday, August 21st, 2016

இந்த ஆண்டின்  இதுவரையான காலப்பகுதியில் சுமார் 34 ஆயிரத்து  773 பேர்  டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த 8 மாதகாலப்பகுதியில்  டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட சமூக வைத்திய நிபுணர் பிரஸிலா சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, காலி, குருணாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் அதிகளவனாவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிகரித்து காணப்படுவதாகவும் அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இந்நிலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொது சுகாதார பரிசோதகர்களுடன் இணைந்து பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகவும், டெங்கு நுளம்பு பரவும் வகையில் சூழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் தேசிய டெங்கு நோய் ஒழிப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts: