தனியார் துறையின் தொழிற்படை தேவையை அடையாளம் காண விசேட ஆய்வு – தொழில் ஆணையாளர் நாயகம் ப்ரபாத் சந்ரகீர்த்தி தெரிவிப்பு!
Monday, July 19th, 2021
தனியார் துறையின் தொழிற்படை தேவையை அடையாளம் காண்பதற்கான ஆய்வுகளை முன்னெடுக்க தொழில் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தொழில்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த ஆய்வுகள் இடம்பெறவுள்ளதாக தொழில் ஆணையாளர் நாயகம் ப்ரபாத் சந்ரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2022 ஆம் ஆண்டில், தனியார் துறைக்கு அவசியமான தொழிற்படையை அடையாளம் காண்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனியார்துறையின் அனைத்து நிறுவனங்களும், அடுத்த ஆண்டில் எதிர்பார்க்கும் இலக்கை பூர்த்தி செய்வதற்கான தொழிற்படை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தொழில் ஆணையாளர் நாயகம் ப்ரபாத் சந்ரகீர்த்தி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இழப்புகளை சரி செய்யவதற்காக மின்சார கட்டணத்தை அதிகரிக்கும் எண்ணம் எதுவும் மின்சார சபைக்கு இல்லை - அம...
கிளிநொச்சிக்கு பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் விஜயம் !
406 புதிய வைத்தியர்கள் நியமனம் - மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருந்தின் விலையிலும் திருத்தம் - அமைச்...
|
|
|


