கிளிநொச்சிக்கு பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் விஜயம் !

Wednesday, June 30th, 2021

இலங்கையும், பாகிஸ்தானும் பாதுகாப்பு ரீதியாக ஒரு கூட்டு நாடுகளாகவே நீண்டகாலமாக இருந்து வருகின்றன எனப் பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் ஓய்வு நிலை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் மொகமட் சாட் கற்றக் தெரிவித்துள்ளார்.

இலங்கை வருகைதந்துள்ள அவர் கிளிநொச்சி இராணுவ தமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் எச்.பி ரணசிங்கவை நேற்று மாலை சந்தித்த கலந்துரையாடியிருந்தார்.

அத்துடன் இரணைமடுவில் அமைந்துள்ள நெலும்பியசவில் கிளிநொச்சி பாதுகாப்புப் படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 30 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதனையடுத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் கடமையில் இருக்கின்ற ஒருவனாகவே உணர்கின்றேன், நான் இங்கு கடமையாற்றுவது என்னுடைய திறமை மட்டுமல்ல. இங்குள்ள அனைத்து மக்களுக்குமான சேவை ஆற்றுவது என்னுடைய கடமையாகும் என தெரிவித்திருந்தார்.

இதனிடையே இன்றையதினம் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் முகமது சாத் கட்டாக் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது யாழ் மாவட்டத்தின் தற்போதைய அபிவிருத்தி, சமகால நிலைமைகள் தொடர்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு  காணொளி முறையில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், மாவட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: