ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு விஜயம்

Wednesday, April 12th, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.  இலங்கைக்கு வருகைதந்துள்ள இவர்கள் தொழிலமைச்சர் உள்ளிட்ட பலரை சந்திக்க உள்ளனர்.

இந்த குழுவினர் இலங்கையின் அபிவிருத்தி நல்லிணக்கணம் தொடர்பில் கவனம் செலுத்தவுள்ளனர்.

இவர்கள் தமது மதிப்பீடுகள் தொடர்பிலான அறிக்கையை பிரசில்ஸில் நடைபெறவுள்ள இலங்கைக்கான வரிச்சலுகையை மீளவழங்கும் கூட்டத்திற்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.இந்த கூட்டம் இம்மாதம் 19ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள் நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இவர்கள் கவனம் செலுத்தவுள்ளனர்.இந்த குழுவினர் தமது விஜயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் ,

நீதித்துறையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக அறிகின்றோம். இருப்பினும் நடைமுறையில் இவை எவ்வாறு உள்ளன என்பதை கண்டறியவுள்ளதாக தெரிவித்தனர்.

அனைத்து கட்சித்தலைவர்களையும் இவர்கள் சந்திக்கவுள்ளதாக குறிப்பிட்டனர்.இந்த விடயங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள GSP பிளஸ் வரிச்சலுகைகளுக்கு மிக முக்கியமாக அமையும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையுடன் வர்த்தக நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு இலங்கையின் மனிதஉரிமைகளின் செயற்பாடுகளை கண்டறிவது அவசியம் ஆகும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related posts:

எரிபொருள் மோசடியில் தனியார் பேருந்து சாரதிகள் - விசாரணை நடத்துமாறு அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிக...
சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிற்கு செல்லும் கர்ப்பிணி தாய்மாருக்கு எரிபொருள் வழங...
உயர்தர பரீட்சை - பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள்அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் - பரீ...