தனியார் துறையிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்ய நிதி கோரல்!

Thursday, March 1st, 2018

தனியார் துறையினரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய 2.5 பில்லியன் நிதி கோரி மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவினால்அமைச்சரவைப் பத்திரமொன்று தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கோரிக்கை 100 மெகாவோல்ட் மின்சாரத்தை உடனடியாக கொள்வனவு செய்வதற்கும் வறட்சி மற்றும் புதிய மின் நிலையங்களை நிர்மானிப்பதில் ஏற்படும் தாமதம் காரணமாகவும் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு அலகு மின்சாரம் 28 ரூபா 20 சதத்துக்கு தனியார் துறையினரிடமிருந்து கொள்வனவு செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 100 மெகாவோல்ட் மின்சாரம் கொள்வனவு செய்யப்பட வேண்டியதன் அவசியம் உள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொடதெரிவித்துள்ளார்.

Related posts:

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள்,உரிமை மீறல்களை கண்டறிவதற்கு நாடாளுமன்ற விசேட குழு – சபாநாயகரிடம் பெண...
கோவிட் தொற்று சவாலை தோற்கடிக்க அனைத்து மக்களினதும் கூட்டு சமூகப் பொறுப்பு அவசியம் - நாட்டு மக்களிடம...
70 பயணிகளுடன் சென்ற பேருந்து ஆற்றில் பாய்ந்து விபத்து - 9 பேர் உயிரிழப்பு - 23 பேர் வைத்தியசாலையில்!