தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 667 பேர் கைது – 63 வாகனங்கள் பறிமுதல் என பொலிசார் தெரிவிப்பு!

தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 667 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், 63 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமை தொடர்பில் கடந்த ஒக்டோபர்முதல் இதுவரை 60 ஆயிரத்து 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தின் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள 13 வீதிச் சோதனை சாவடிகளில் மேல் மாகாணத்துக்குள் பிரவேசித்த 641 வாகனங்களில் பயணித்த ஆயிரத்து 128 பேர் சோதனையிடப்பட்டுள்ளனர்.
அத்துடன், மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறிய 500 வாகனங்களில் பயணித்த 901 பேரும் பொலிசாரால் சோதனையிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இராஜதந்திர பொறிமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் இலங்கை!
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் பலர் கைது!
ஊழல் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் தண்டிக்கப்பட வேண்டும் - சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அ...
|
|