தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி 15 பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
Wednesday, June 23rd, 2021
கடந்த 2 நாட்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பயணித்த 15 பேருந்துகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுகாதார வழிமுறைகளை மீறி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளை அடையாளம் காண்பதற்கான சுற்றிவளைப்புகள் இன்றுமுதல் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்படி பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளில் சிவில் உடை அணிந்த பொலிஸார் பொதுமக்களை போன்று பயணிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனர்த்த முகாமைத்துவ செயற்பாட்டு மத்திய நிலையம் அமைக்க நடவடிக்கை!
ஜனவரி மாதத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
இலங்கையின் எரிபொருள் சந்தையில் நுழைவதற்கு 3 வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அமைச்சரவை அனுமதி - வலுசக்தி அ...
|
|
|


